தென்காசியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு
தென்காசியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
டெங்கு காய்ச்சல்
தென்காசி பகுதியில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஒரு சிறுமி நெல்லையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டெங்கு காய்ச்சலால் இறந்தாள்.
இந்த நிலையில் தென்காசி நடுப்பேட்டை தெரு, கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெரு, மலையான் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 10 முதல் 12 வயது உள்ள 2 சிறுவர்கள், ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று மேலகரம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தடுப்பு நடவடிக்கை
இதுகுறித்து உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாசம், மாரிமுத்து, மகேஸ்வரன் ஆகியோர் தென்காசியில் உள்ள 33 வார்டுகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story