தூய்மை பணியாளரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
தூய்மை பணியாளரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை,பிப்.
துரை மானகிரியைச் சேர்ந்த கதிரவன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது தந்தை வேல்முருகன் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மை பணியாளராக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதமாக அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற அவர் இரவு 10 மணி ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை.
மறுநாள் எனது தந்தை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. எனது தந்தையின் உடலை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. எனது தந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனது தந்தையின் உடல் அவசரமாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
எனவே எனது தந்தையின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கவும், வீடியோ பதிவு செய்யவும், இந்த வழக்கை சிறப்பு விசாரணை அமைப்பிற்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தந்தை உடலை ஏற்கனவே பரிசோதனை செய்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீனுக்கு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story