வலிப்பு வந்ததால் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு


வலிப்பு வந்ததால் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 20 Feb 2021 3:02 AM IST (Updated: 20 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

வலிப்பு வந்ததால் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு

துவரங்குறிச்சி, 
வளநாடு அருகே உள்ள ஊனையூர், அம்பிகாபுரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (வயது 35). கல்உடைக்கும் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வளநாடு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த இவர், தனது வீட்டருகே உள்ள கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்து கிணற்றினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story