திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
திருச்சி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
திருச்சி,
திருச்சி வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கத்தினர் நேற்று திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோட்ட அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது வியாபாரிகள் கூறுகையில், வயலூர் சாலை புத்தூர் பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மாநகராட்சிக்கு தொழில் வரி, குப்பை வரி ஆகியவற்றை முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் இப்பகுதியில் உள்ள கடைகளில் உள்ள குப்பைகளை வாங்க மறுக்கிறார்கள். மேலும் எங்கள் கடை முன் போடப்படும் தரைக்கடை வண்டிக்கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு தனியாக இடம் கொடுத்து உதவவேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வியாபாரிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் குப்பைகளை எடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மறுபடியும் குப்பைகளை கொண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு முன் கொட்டி போராட்டம் நடத்துவோம்' என்றனர்.
Related Tags :
Next Story