மது குடிக்க மனைவி பணம் தராததால், விஷம் குடித்து முதியவர் தற்கொலை
மது குடிக்க மனைவி பணம் தராததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிக்க பணம்...
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம் (வயது 60). மது குடிக்கும் பழக்கம் கொண்ட தமிழ்செல்வம் அடிக்கடி தன்னுடைய மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வம் தனது மனைவி விஜயாவிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறி விட்டு பாக்குப்பேட்டையில் ஏரி வேலைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தமிழ்ச்செல்வம் மது குடிக்க பணம் தராத ஏக்கத்தில் பூச்சி மருந்து (விஷம்) குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார்.
சாவு
இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து விஜயா மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story