தாரமங்கலம்: தீக்குளித்த பெண் சாவு


தாரமங்கலம்: தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 20 Feb 2021 6:51 AM IST (Updated: 20 Feb 2021 6:51 AM IST)
t-max-icont-min-icon

தீக்குளித்த பெண் சாவு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி (வயது 60). இவருக்கு 6 மகள்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டனர். இவரது கடைசி மகளான ராசாத்தி (30) தனது கணவர் மணியுடன் கிருஷ்ணகிரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த வீடு கட்ட ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். அதற்கு வட்டி கட்டி வந்த நிலையில் தொழில் சரிவர நடைபெறாமல் வருமானம் இன்றி தவித்தனர். இதனால் கடனை அடைக்க முடியாத மிகுந்த மன வேதனையில் ராசாத்தி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது தாய் வீட்டுக்கு ராசாத்தி வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத போது மண்எண்ணெய் எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராசாத்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story