வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக குறைவு


வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக குறைவு
x
தினத்தந்தி 20 Feb 2021 5:37 PM IST (Updated: 20 Feb 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணை நீர்மட்டம் 67 அடியாக குறைந்தது. இதனால் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள  71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த மாதம் முழுக்கொள்ளளவை எட்டியது. 

இந்த அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டினால் மட்டுமே உசிலம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். 

அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதுதவிர பெரியாறு பாசன கால்வாயிலும், வைகை ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.


நீர்மட்டம் குறைந்தது


 இந்நிலையில் வைகை அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

 இதனையடுத்து 30 நாட்கள் வரை முழுக்கொள்ளளவில் நீடித்த வைகை அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது. 

அணைக்கு வினாடிக்கு 454 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 

அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 669 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  


நேற்று காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 67.29 அடியாக குறைந்தது. 

இதைத்தொடர்ந்து நேற்று முதல் 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. 

கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நேற்று காலை வரை 58-ம் கால்வாயில் சுமார் 315 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 58-ம் கால்வாயில் அதிகளவு தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story