வடுகந்தாங்கல் மாடு விடும் திருவிழாவில் போலீஸ் தடியடி
வடுகந்தாங்கல் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் ஓடுபாதையின் குறுக்கே நின்ற வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
கே.வி.குப்பம்
வடுகந்தாங்கல் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் ஓடுபாதையின் குறுக்கே நின்ற வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் இ.பி.காலனியில் மாடுவிடும் திருவிழா நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 112 காளை மாடுகள் கலந்து கொண்டன.
மாரியம்மன் கோவிலின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து காளை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உரிய இடைவெளியில் ஓட அனுமதிக்கப்பட்டன.
மாடுகள் ஓடிக் கொண்டிருந்த போது, பல வாலிபர்கள் மாடு ஓடுபாதையில் நின்றபடி இருந்தனர். இவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த நிலையில் மாடுகள் ஓடும்போது குறுக்கே நின்ற வாலிபர்கள் மீது மாடுகள் முட்டியதாலும், பயந்து ஒடியதாலும் சுமார் 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரத்து 777, 2-வது இடம் பெற்ற காளைககு ரூ.50 ஆயிரத்து 555, 3-வது இடம் பெற்ற காளைக்கு ரூ.40 ஆயிரத்து 444 பரிசாக வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story