வாகனம் மோதி மான் சாவு
மூங்கில்துறைப்பட்டு அருகே வாகனம் மோதி மான் செத்தது
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. தற்போது ஏரியில் அதிகளவில் தண்ணீர் காணப்படுவதால் இரைதேடி வரும் மான்கள் அவ்வப்போது விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் சாலையை கடந்து மறுபக்கம் உள்ள இடங்களுக்கும் சென்று வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு புதூர் ஏரிக்கரையோரம் உள்ள கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை புள்ளி மான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மான் செத்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானை வடபொன்பரப்பி காப்புக்காட்டில் புதைத்தனர்.
Related Tags :
Next Story