காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 10:13 PM IST (Updated: 20 Feb 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை கோட்டைவாசல்படி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். ெடல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. 
ஊர்வலம் செல்ல முயற்சி
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் நாகை கோட்டை வாசல் பகுதியில் இருந்து தம்பிதுரை பூங்கா வரை கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story