கமல்ஹாசனை முதல்-அமைச்சராக்க பாடுபட வேண்டும்
சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று கமல்ஹாசனை முதல்-அமைச்சராக்க பாடுபட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று கமல்ஹாசனை முதல்-அமைச்சராக்க பாடுபட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
நாகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செய்யது அனஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது. தேர்தல் தொடர்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் விருப்ப மனு அளித்தல், பூத் கமிட்டி நிறைவு செய்தல் என்பன உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
சென்னையில் மாநாடு
சென்னையில் வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறும் கட்சி மாநாட்டில் திரளானோர் கலந்து கொள்வது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று கட்சி தலைவர் கமல்ஹாசனை முதல்-அமைச்சராக்க அயராது பாடுபட வேண்டும். நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நாகை மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான மத்திய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர், வார்டு, ஊராட்சி அளவிலான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story