மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 Feb 2021 11:00 PM IST (Updated: 20 Feb 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கூடூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்;
திருவாரூர் அருகே கூடூரில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். 
ரெயில்வே கேட் 
திருவாரூர் அருகே கூடூர் பகுதியில் உள்ள ரெயில்வே பாதையில்  ரெயில்வே கீழ்பாலம் அமைக்கப்பட்டது. காட்டாற்றின் அருகில் கீழ்பாலம் இருப்பதால் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கி நிற்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்த வழிப்பாதையை பயன்படுத்தும் கூத்தங்குடி, அன்னுகுடி, கல்யாணமகாதேவி ஆகிய கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.. மேலும் உரிய வழிப்பாதையற்ற நிலையில் அவசர தேவைக்காக பாதுகாப்பு இன்றி ரெயில் பாதையை மக்கள் கடந்து சென்று வருகின்றனர்.  எனவே ஆள் உள்ள ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
சாலைமறியல் 
எனவே தேங்கி நிற்கும் கீழ்பாலத்திற்கு மாற்றாக ஆள் உள்ள ரெயில்வே கேட் அமைத்து தர வலியுறுத்தி திருவாரூர் கூடூர் காட்டாற்று பாலம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கிளை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.  மாவட்டக்குழு உறுப்பினர் பழனிவேல் மற்றும் கிராம மக்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 30 நிமிடம்   போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story