ரூ.1¼ கோடியில் திருமண உதவித்தொகை- தாலிக்கு தங்கம்
திருவாரூரில் 150 பேருக்கு ரூ.1¼ கோடியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
திருவாரூர்;
திருவாரூரில் 150 பேருக்கு ரூ.1¼ கோடியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கத்தை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
திருமண உதவித்தொகை
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது, விழாவுக்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வீட்டு மனைப்பட்டா
ஏழை பெண்கள் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 150 பேருக்கு திருமண நிதியுதவியாக ரூ.71 லட்சத்து 25 ஆயிரம், ரூ.58 லட்சத்து 63 ஆயிரத்து 500 மதிப்பிலான தாலிக்கு தங்கம் என மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 500 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறையின் சார்பில் 475 பேருக்கு உதவித்தொகையும், 14 பேருக்கு வீட்டுமனைபட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. .
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, உதவி கலெக்டர் பாலசந்திரன், கமலாம்பிகா கூட்டுறவு வங்கி தலைவா ஆர்.டி.மூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா மணிகண்டன், தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story