இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்
அலங்காநல்லூர்,
பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் வளர்க்கப்பட்டு வந்த சின்னம்மன் கோவில் காளை நேற்று காலை உடல்நல குறைவால் இறந்தது. இதற்கு வேட்டி, துண்டுகள், பூ மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த கோவில் காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கு பெற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. இந்த காளை இறந்த தகவல் அறிந்து பக்கத்து கிராமத்தை சேர்ந்த பலரும் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த கோவில்காளையை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story