புதிய திட்டப்பணி தொடக்கம்
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
காளையார்கோவில்,
-
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், மறவமங்களம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையும், தொடர்ந்து சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மேலப்பூங்குடி ஊராட்சி, வலையராதினிபட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜையினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story