கீழடியில் குழி தோண்டும் பணி மும்முரம்


கீழடியில் குழி தோண்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 20 Feb 2021 11:38 PM IST (Updated: 20 Feb 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக கீழடியில் குழி தோண்டும் பணி மும்முரமாக நடைபெற்றது.

திருப்புவனம்,

தமிழர்களின் தொன்மையை பறை சாற்றும் கீழடியில் இதுவரை 6 கட்டமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்ைடய தமிழர்களின் நாகரிக பொருட்கள் ஏராளமானவை ஆவணப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த 13-ந்தேதி சென்னையில் இருந்தே காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழடியில் குழி தோண்டும் பணி தொடங்கியது. தற்போது 9 குழிகள் தோண்டுவதற்காக நூல் அளவீடு செய்யப்பட்டது. இதில் ஒரு குழியை கூலி தொழிலாளர்கள் மும்முரமாக ேதாண்டும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 2 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்று உள்ளது.


Next Story