ரங்காபுரம் மலையில் திடீர் தீ
வேலூர் ரங்காபுரம் மலையில் தீ பற்றி எரிந்தது. சமூக விரோதிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் ரங்காபுரம் மலையில் தீ பற்றி எரிந்தது. சமூக விரோதிகளை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலையில் தீ
வேலூர் மாநகரில் மலைத்தொடர்கள் உள்ளன. இங்கு செடி, கொடி மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கோடைகாலங்களில் செடி, கொடி, புற்கள் காய்ந்து விடும். அப்போது மர்மநபர்கள் அதில் தீ வைத்து விடுவார்கள். இந்த செயல் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகி விட்டது. இதை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்தாண்டு கோடை காலம் வரும் முன்னரே மலைகளுக்கு தீ வைப்பதை மர்மநபர்கள் தொடங்கி உள்ளனர். அதன்படி ரங்காபுரம் பகுதியில் உள்ள மலையில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதனால் கரும்புகையுடன் தீ மளமளவென எரிந்தது. ஏராளமான மரங்கள் கருகின. தகவல் அறிந்தவுடன் வேலூர் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு குழு
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வேலூர் பகுதிகளில் உள்ள மலைகளுக்கு தீ வைக்க கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு குழு அமைத்துள்ளோம். அக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். துண்டுபிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், அக்குழுவினர் தீ வைக்கும் சமூகவிரோதிகள் குறித்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். குழுவில் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். தீ வைக்கும் சமூக விரோதிகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்காடு புங்கனூர் காப்புக்காடுகளில் வைக்கப்படும் தீ காற்றில் பரவி ரங்காபுரம் பகுதியில் எரிந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--
Related Tags :
Next Story