463 விவசாயிகளுக்கு ரூ.45½ லட்சம் இழப்பீட்டு தொகை

463 விவசாயிகளுக்கு ரூ.45½ லட்சம் இழப்பீட்டு தொகை
x
தினத்தந்தி 20 Feb 2021 11:47 PM IST (Updated: 20 Feb 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 463 விவசாயிகளுக்கு ரூ.45½ லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட 463 விவசாயிகளுக்கு ரூ.45½ லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பயிர் காப்பீடு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- 
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2019-2020) ராபி பருவத்தில் நெல் பயிர் காப்பீடு தொகை ரூ.70 கோடியே 65 லட்சம் காப்பீட்டு நிறுவனத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இதில் வங்கி கணக்கு விவரங்களை மாறுபாடாக பதிவேற்றம் செய்ததால் ரூ.1 கோடியே 70 லட்சம் விடுபட்டது. 
463 விவசாயிகளுக்கு...
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கையினால் கடந்த மாதம் ரூ.1 கோடியே 12 லட்சம் விவசாயிகளின் சரியான வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்சமயம் 463 விவசாயிகளுக்கு ரூ.45 லட்சத்து 47 ஆயிரம் வங்கி மூலம் வழங்கப்பட உள்ளது. இதேபோல கடந்த ஆண்டு மிளகாய் பயிருக்கான காப்பீட்டு தொகையை பெற்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story