சிதிலமடைந்து 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா


சிதிலமடைந்து 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா
x
தினத்தந்தி 20 Feb 2021 11:55 PM IST (Updated: 20 Feb 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பகுதியில் சிதிலமடைந்து வரும் 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருப்பூர்:
திருப்பூர் பகுதியில் சிதிலமடைந்து வரும் 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆன்மாவுக்கு நினைவுச்சின்னம்
பல்வேறு  இயற்கை சூழலில் வாழ்கின்ற மக்கள் அந்த சூழலுக்கு ஏற்ப  தம்மை மாற்றிக்கொண்டு தமது பண்பாட்டுக்கூறுகளை  முன்னெடு்த்து சென்றுள்ளதை நாம் அவர்கள் விட்டுச்சென்றுள்ள பொருட்களின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகம் முழுவதும் வாழ்ந்த பண்டைய மக்கள் மனிதனின் இறப்புக்கு முன்பு உடல் அழியக்கூடியது என்றும், ஆன்மா அழிவு இல்லாமல் வாழக்கூடியது என்றும் நம்பினர். 
எனவே  தமது இனக்குழுவில் இறந்தவர்களின் ஆன்மா தங்குவதற்காக நினைவு சின்னங்களை ஏற்படுத்தி அந்த ஆன்மாவுக்கு படையல் இட்டு பூஜைகள் செய்து வந்துள்ளனர். இந்த வழக்கம் தமிழகத்தில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக நிலவி வருகிறது. அவ்வாறு பூஜை செய்வதால் ஆபத்துக்காலங்களில் இந்த ஆன்மா தமது இனக்குழு மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினர். இந்த வழக்கம்  தை மற்றும் ஆடி அமாவாசையில் மேற்கொள்ளப்படும் முன்னோர் வழிபாடு மூலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வீரமாத்தி அம்மன் வழிபாடு
பண்டைய காலத்தில்  கணவர் இறந்துவிட்டதால் அவரது மனைவி உயிர் வாழ்வதில்லை என்பது ஒரு மரபு. இவ்வாறு கணவன் இறந்தவுடன் ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த பெண் தீயில் இறங்கி உயிர் விட்டு விடுவார். அதே இடத்தில் இதுபோன்ற நினைவுச்சின்னங்களை  ஏற்படு்த்தி வழிபாடு மேற்கொள்வார்கள். பின்னாளில் அருகிலேயே ஒரு சிறிய கோவிலையும் நிர்மானம் செய்து வீரமாத்தி அம்மன் என்று வழிபாடு மேற்கொள்வார்கள்.
திருப்பூர் பகுதியில் கஞ்சம்பர்ளையம் ராதாநகர், மண்ணரை, சேவூர் அருகே புஞ்சை புளியம்பட்டி ஆகிய இடங்களில் உள்ளது. இவ்வாறு ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்கள் தான் தற்போது சிதிலமடைந்து வருகிறது. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்பது இந்த பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் அ.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story