திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை
திருமணம் ஆகாததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி,பிப்.21-
ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி வடக்கு அஹ்ரகாரத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 46). விவசாயியான இவருக்கு பல இடங்களில் பெண் பார்க்கப்பட்டது. ஆனால் திருமணம் கூடிவரவில்லை. 46 வயதாகியும் திருமணம் ஆகாததால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்பத்தினரிடம் கூறிவிட்டு வயலுக்கு சென்றார். இந்த நிலையில் இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அங்கு ராமன் குளத்துகரையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story