பாபநாசம்-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது


பாபநாசம்-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில்  வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 21 Feb 2021 1:28 AM IST (Updated: 21 Feb 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம்-முண்டந்துறை புலிகள் காப்பாகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம்-முண்டந்துறை புலிகள் காப்பாகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம்- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. 

அம்பை வனக்கோட்டம் சார்பில் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு அம்பை வனச்சரகத்தில் இருந்து 6 குழுவும், கடையம் வனச்சரகத்தில் இருந்து 6 குழுவும், பாபநாசம் வனச்சரகத்தில் இருந்து 4 குழுவும் முண்டந்துறை வனச்சரகத்தில் இருந்து 13 குழுவும் என 29 குழுக்களாக சென்று வனவிலங்குகளை கணக்கெடுக்க உள்ளனர்.

கல்லூரி மாணவர்கள்

ஒவ்வொரு குழுவிலும் வன காப்பாளர் ஒருவர், வன காவலர் ஒருவர், வேட்டை தடுப்பு காவலர்கள் 2 பேர், தன்னார்வலர் ஒருவர் என 5 பேர் இருப்பார்கள். இவர்கள் முதல் மூன்று நாட்கள் மறைமுக கணக்கெடுப்பது அதாவது மான், சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் எச்சம் மற்றும் மரங்களின் விலங்குகளின் நகக்கீறல்கள் தரையில் வனவிலங்குகளின் கால்தடங்கள் ஆகியவற்றை சேகரிப்பார்கள். 

அடுத்த 3 நாட்களில் நேர்கோட்டில் நேர்முக கணக்கெடுப்பில் வனவிலங்குகளை நேரடியாக கண்டு கணக்கெடுக்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி மாணவர்கள் மற்றும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story