தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2021 2:57 AM IST (Updated: 21 Feb 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி, 
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தை சேர்ந்தவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதிய பிடித்தங்கள், பறிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வுகள், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியங்கள் மற்றும் பதவி உயர்வுகளை திரும்ப வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரணநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் வேலுமணி நன்றி கூறினார். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் பென்னுச்சாமி வரவேற்று பேசினார்.

Next Story