மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2021 4:13 PM IST (Updated: 21 Feb 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 37), பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோவர்தினி என்ற வர்தினி (16). பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் சூர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது கோவர்தினி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

தாயின் பராமரிப்பில்

இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று கோவர்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் சூர்யாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து தாயின் பராமரிப்பில் இருந்த கோவர்தினி இந்த வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு செல்லலாம் என கூறி வந்ததாகவும் இதனை தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் உறவினர்கள் அதிக அளவில் அவர்களிடம் பேசாமல் இருந்து வந்ததாகவும் இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோவர்தினி தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story