வேட்டவலம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதற்காக தோண்டிய பள்ளத்தில் குதித்து பெண் போராட்டம்.
வேட்டவலம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அதற்காக தோண்டிய பள்ளத்தில் குதித்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்டவலம்
உயர்மின் கோபுரம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் மனைவி லட்சுமிகாந்தம் (வயது 53), விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் லட்சுமிகாந்தம்மாவிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் ்வருடைய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்துள்ளது.
இதை குறித்து தகவலறிந்த லட்சுமிகாந்தம் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் உரிய இழப்பீடு வழங்காமல் உயர் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்கக்கூடாது என கூறினார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளத்தில் இறங்கி போராட்டம்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமிகாந்தம் உயர்மின் கோபுரம் அமைக்க தோண்டப்பட பள்ளத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர்மின் கோபுரம் அமைக்க இழப்பீடு வழங்காமல் பணியை தொடங்கக்கூடாது. இங்கு நடைபெரும் பணியை கைவிட்டால் தான் மேலே வருவேன் என லட்சுமிகாந்தம் கூறினார்.
பணிகள் நிறுத்தம்
அதற்கு உயர்மின் கோபுரம் அமைக்க நிலத்திற்கான இழப்பீடு வழங்கிய பின்னர் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்பு பள்ளத்தில் இருந்த லட்சுமிகாந்தம் வெளியே வந்தார். இதையடுத்து பணகள் நிறுத்தப்பட்டது.
இச்சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story