பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பேரணி


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் பேரணி
x
தினத்தந்தி 21 Feb 2021 4:51 PM IST (Updated: 21 Feb 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி சிலை அருகே கையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.

திருவொற்றியூர், 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் திருவொற்றியூர் காலடிப்பேட்டை காந்தி சிலை அருகே கையில் பதாகைகளை ஏந்தி பேரணி நடைபெற்றது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் அருகில் உள்ள காமராஜர் சிலை வரை பாதயாத்திரையாக சென்ற அவர்கள், காமராஜர் சிலை அருகே மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் கமலி காமராஜ் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமி நகரில் மக்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழிப்புணர்வு இயக்க தலைவர் ராமராவ் தலைமையில் பெண்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story