கல்லாங்குத்து கிராமத்தில் மாடு விடும் விழா, காளைகள் முட்டி பள்ளி மாணவன் உள்பட 14 பேர் காயம்.


கல்லாங்குத்து கிராமத்தில் மாடு விடும் விழா, காளைகள் முட்டி பள்ளி மாணவன் உள்பட 14 பேர் காயம்.
x
தினத்தந்தி 21 Feb 2021 6:54 PM IST (Updated: 21 Feb 2021 6:54 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டு தாலுகா கல்லாங்குத்து கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. அதில் காளைகள் முட்டி பள்ளி மாணவன் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு

30 பசுக்கள் நிராகரிப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தார்வழியை அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் மாடு விடும் விழா நேற்று நடந்தது. தனித் தாசில்தார் குமார் (கோவில் நிலம்), அணைக்கட்டு தாசில்தார் பழனி ஆகியோர் உறுதிமொழி ஏற்று, மாடு விடும் விழாவை தொடங்கி வைத்தனர். 

140 காளைகள் கொண்டு வரப்பட்டன. காளைகளுக்கு அணைக்கட்டு கால்நடை மருத்துவர் மோகன்குமார் மருத்துவப் பரிசோதனை செய்தார். அதில் 30 பசுக்களை கால்நடை மருத்துவர் நிராகரித்து விட்டார். காலை 10 மணியளவில் போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து காைளகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

14 பேர் காயம்

காைளகள் சீறிப் பாய்ந்து ஓடின. மழையால் ஓடும் பாதையில் சேறும் சகதியுமாக இருந்ததால் காளைகள் வேகமாக ஓட முடியவில்லை. பார்வையாளர்கள் சிலர் ஓடும் பாதையில் நின்று காளைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். காளைகள் முட்டி செதுவாலைையச் சேர்ந்த சக்திவேல் என்ற பள்ளி மாணவன் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களுக்கு டாக்டர் வினோத்குமார் மற்றும் குழுவினர் சிகிச்சை அளித்தனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர். அணைக்கட்டு வருவாய் ஆய்வாளர் முகமதுசாதிக் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். 

குறிப்பிட்ட தூரத்தை வேகமாக ஓடி கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.55 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.35 ஆயிரம் என மொத்தம் 43 பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story