திருவள்ளூர் அருகே வீடு தேடி சென்று வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிய ஆர்.டி.ஓ.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சியில் 18 வயது பூர்த்தி அடைந்த பலர் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாமல் இருந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் ஊராட்சியில் 18 வயது பூர்த்தி அடைந்த பலர் இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாமல் இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. பிரீத்தி பார்கவி அங்கு சென்று அவர்களிடம் தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் அங்கு இருந்த 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். இதன் பயனாக ஒரே வாரத்தில் அங்கு உள்ள 50 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. பிரீத்தி பார்கவி நேற்று அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். மரக்கன்றுகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ஆதிஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர் மோகனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இந்த அதிகத்தூர் ஊராட்சியை திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தத்தெடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story