ஏலகிரிமலையில் போலிசாருக்கு மலையேறும் பயிற்சி நடந்தது.
ஏலகிரிமலையில் போலிசாருக்கு மலையேறும் பயிற்சி நடந்தது.
ஜோலார்பேட்டை
போலீசாருக்கு மலையேறும் பயிற்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு கடந்த வாரம் ஏளகிரிமலையில் மலையேறும் பயிற்சி நடந்தது.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நேற்று 2-வது கட்டமாக மலையேறும் பயிற்சி மற்றும் முதலுதவி பயிற்சி நடந்தது. மலையேறும் பயிற்சியில் திருப்பத்தூர் பாலர் மன்றம் சார்பில் 25 மாணவர்களும் மாவட்டத்தில் பணியாற்றும் 25 போலீசாரும் பங்கேற்றனர்.
முதலுதவி
ஏலகிரிமலை கோடை விழா அரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சிறப்புரை ஆற்றி போலீசாரின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தினார். பாலர் மன்றத்தில் இருந்து வந்திருந்த மாணவர்கள் மூலம் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முதல் உதவி செய்வது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பயிற்சி அளித்தார்.
பின்னர் இந்த பயிற்சி குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
Related Tags :
Next Story