கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல் வாலிபர் கைது


கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்-மனைவி மீது தாக்குதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2021 7:54 PM IST (Updated: 21 Feb 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே வீடு புகுந்து கணவன்- மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மேலபுழுதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(வயது45). அதே பகுதியை சேர்ந்தவர் முத்தரசன்(22). நேற்று சேகருக்கும் முத்தரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முத்தரசன் மற்றும் அவருடைய உறவினர்கள் 3 பேர் சேர்ந்து வீடு புகுந்து சேகரை தாக்கினர். அப்போது இதை தடுக்க முயன்ற சேகரின் மனைவி விஜயாவும் தாக்கப்பட்டார்.

கைது

தாக்குதலில் படுகாயமடைந்த கணவன்-மனைவி இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீஸ் நிலையத்தில் சேகர் கொடுத்த புகாரின் பேரில் முத்தரசன் மற்றும் அவருடைய உறவினர்கள் 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து முத்தரசனை (22) கைது செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story