தாராபுரம் பகுதியில் நெல் அமோக விளைச்சல் அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்


தாராபுரம் பகுதியில் நெல் அமோக விளைச்சல்  அறுவடைக்கு தயாராகும் விவசாயிகள்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:25 PM IST (Updated: 21 Feb 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

நெல் அமோக விளைச்சல்

தாராபுரம், 
உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இந்த அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டத்தை சோ்ந்த லட்சக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த நிலையில் அமராவதி அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த வருடம் நல்ல மழைபெய்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் கடந்த 6 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டியது. 
இதனால் கடந்த சில மாதங்களாக ஆற்றில் தண்ணீா் ஓடிக் கொண்டே இருக்கிறது. அதுபோன்று அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டது. அதன்மூலம் அமராவதி அணை பாசனத்திற்கு உட்பட்ட கடைமடை விவசாயிகளுக்கும் தண்ணீா் கிடைக்கப்பெற்று வருகிறது. இதனால் தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், கோவிந்தாபுரம், சத்திரம், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளையம், நஞ்சியம்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் நடவு பணி செய்தனர். தற்போது நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.  

Next Story