புதிய ரெயில் பால பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்


புதிய ரெயில் பால பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:51 PM IST (Updated: 21 Feb 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் கடலில் நடைபெற்றுவரும் புதிய ரெயில் பால பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

ராமேசுவரம், 
பாம்பன் கடலில் நடைபெற்றுவரும் புதிய ரெயில் பால பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பாம்பன் பாலம்
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ெரயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதுபோல் பாம்பன் ெரயில் பாலம் ஆனது 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிதாக ெரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதற்காக கடலுக்குள் இரும்பினாலான மிதவைகள் நிலைநிறுத்தப்பட்டு அதன்மீது எந்திரங்கள் நிறுத்தப்பட்டு எந்திரம் மூலம் கடலுக்குள் துளையிடப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பணிகள்
பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ெரயில் பால பணிகள் இரவு பகலாக துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.  பாம்பன் ெரயில்வே பாலம் மற்றும் புதிய ெரயில் பால பணிகளை ஆய்வு செய்ய நேற்று தெற்கு ெரயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையா சென்னையில் இருந்து சிறப்பு ெரயில் மூலமாக பாம்பன் வருகை தந்தார். 
பாம்பன் வழியாக ெரயிலில் இருந்து இறங்கி மோட்டார் பொருத்திய டிராலி மூலம் பாம்பன் ெரயில்வே பாலத்திற்கு வருகை தந்த அவர் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் 2 கிலோ மீட்டர் நீளம் உடைய ெரயில் பாலத்தில் நடந்து சென்று ெரயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து இரும்பு கர்டர், தண்டவாளம் தூண்களை தீவிரமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ெரயில் பாலத்தில் நின்றபடியே கடலுக்குள் நடைபெற்று வரும் புதிய ெரயில் பால பணிகளையும் பார்வையிட்டார்.
பேட்டி
ஆய்வுக்குபின் தெற்கு ெரயில்வே கூடுதல் பொது மேலாளர் மல்லையா கூறியதாவது:- தற்போதுள்ள பாம்பன் ெரயில் பாலம் உறுதித் தன்மை யுடன் நல்ல நிலையில் உள்ளது. கடலில் புதிய ெரயில் பாலம் பணிகளுக் காக எந்திரம் மூலம் அமைக்கப்பட்டு வரும் தூண்களினால் தற்போது உள்ள ெரயில் பாலத்தில் எந்த ஒரு அதிர்வு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ெரயில் பாலம் பாதுகாப்பாக உள்ளது.
பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ெரயில் பாதை பணிகள் இதுவரையிலும் 30 சதவீதம் முடிவடைந்து விட்டன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பாம்பன் புதிய ெரயில் பாலபணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story