நாகையில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கழிவறை


நாகையில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கழிவறை
x
தினத்தந்தி 21 Feb 2021 10:12 PM IST (Updated: 21 Feb 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் திறப்பு விழாவுக்காக கழிவறை கட்டிடம் காத்திருக்கிறது.

நாகப்பட்டினம்:
நாகை புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் உள்ளது. இந்த கோர்ட்டு வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகங்கள், மாவட்ட சிறை துறை, கருவூல அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.  இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தின் முன்பு மாற்றுத்திறனாளிக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.18 லட்சம் செலவில் கழிவறை கட்டப்பட்டது. 
ஆனால் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. 4 ஆண்டுகளாக கழிவறை கட்டிடம் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இதனால் இங்கு வரும் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறையினர்  உள்ளிட்ட அலுவலர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் கழிவறை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story