திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயம்


திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Feb 2021 10:48 PM IST (Updated: 21 Feb 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரிஷிவந்தியம்

பிளஸ்-2 மாணவர்

திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை  சேர்ந்த 17 வயது மாணவர் திருக்கோவிலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த போது தலை முடி அளவுக்கு அதிகமாக வளர்ந்து இருந்ததால் அதை வெட்டிக் கொண்டு வரும்படி ஆசிரியர்கள் அறிவுரை கூறி அனுப்பினர். 

இந்நிலையில் மாணவர் அவரது நண்பர்களுடன் திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்றுப் பாதை வழயே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தன்னுடன் படிக்கும் தாசர்புரம் காலனியை சேர்ந்த மாணவர்களும் வந்தனர். 

மோதல்

பின்னர் திடீரென மாணவர்கள் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 
இதுபற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் போலீசர் அங்கு வந்தனர். இதைப்பார்த்து தாசர்புரம் காலனியை சேர்ந்த மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த மோதலில் சந்தைப்பேட்டையை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது  நண்பர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக  திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முன்விரோதம் காரணமாக

முன்விரோதம் காரணமாக இந்த மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தைப்பேட்டையை சேர்ந்த மாணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story