மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி + "||" + College student killed in motorcycle collision with retaining wall near Chinnasalem

சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
சின்னசேலம் அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்
சின்னசேலம்

சின்னசேலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 23). இவர் சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடசென்னிமலை அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற தமிழ்செல்வன் மாலையில் வகுப்பு முடிந்ததும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவனூர் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தாய் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
பழனி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.
2. கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
3. ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
ராயக்கோட்டை அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் கல்லூரி மாணவர் பலி