அணைக்கட்டில் மினி மாரத்தான் போட்டி. 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு.


அணைக்கட்டில் மினி மாரத்தான் போட்டி. 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு.
x
தினத்தந்தி 21 Feb 2021 11:04 PM IST (Updated: 21 Feb 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

அணைக்கட்டில் மினி மாரத்தான் போட்டி. 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு.

அணைக்கட்டு

அணைக்கட்டில் அ.தி.மு.க. சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வேலழகன் கொடியசைத்து இந்தப் போட்டியை தொடங்கி வைத்தார். ஊசூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அணைக்கட்டு பஸ் நிலையம் வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த மினி மாரத்தான் போட்டியில் கோவை, ஈரோடு, சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோப்பையை தட்டிச் சென்றார்.

நிகழ்ச்சியில் அணைக்கட்டு ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், பாபுஜி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். அணி செயலாளர் சேரன், வேலூர் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஹேமந்த் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டு பரிசுகளை வழங்கினர்.

Next Story