நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசலில் சென்ற சுற்றுலா பயணிகள்


நீர்வரத்து குறைந்தது: ஒகேனக்கல்லில் பரிசலில் சென்ற சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 21 Feb 2021 11:12 PM IST (Updated: 21 Feb 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லில் பரிசலில் சென்ற சுற்றுலா பயணிகள்

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைய தொடங்கியது. இந்த நிலையில் வாரவிடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் அருவி மணல் திட்டு, ஐந்தருவி வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர். தொடர்ந்து அவர்கள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

Next Story