4 மாதங்களில் 2-வது முறையாக நிரம்பிய அரும்பாவூர் பெரிய ஏரி
4 மாதங்களில் 2-வது முறையாக அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பச்சைமலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கல்லாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்று தண்ணீர் அரும்பாவூர் பெரிய ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரி நிரம்பி வழிகிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இந்த ஏரி நிரம்பியது. தற்போது மீண்டும் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களில் இந்த ஏரி 2-வது முைறயாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரானது அரும்பாவூர் சித்தேரிக்கு செல்கிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு முழுவதும் அரும்பாவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story