மாவட்ட செய்திகள்

களக்காடு மலையில்வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது + "||" + Wildlife survey work started

களக்காடு மலையில்வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

களக்காடு மலையில்வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
களக்காடு:
களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி  தொடங்கியது.

கணக்கெடுப்பு பணி

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டு பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

இந்த பணியில் 60 வனத்துறை ஊழியர்கள், 40 தன்னார்வலர்கள் என மொத்தம் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுப்பது எப்படி? என்பது குறித்த பயிற்சி ஏற்கனவே அளிக்கப்பட்டது.

தொடர்ந்து  வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக 100 பேரும் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு ஆகிய வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு தொடங்கி வைத்தார். வனச்சரகர் பாலாஜி, வனவர்கள் சந்திரன், ஜெபிந்தர்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

28-ந் தேதி வரை

வனப்பகுதியில் வனவிலங்குகளை நேரில் பார்த்தும், அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை பதிவு செய்தும் கணக்கெடுக்கின்றனர். மேலும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தானியங்கி கேமராக்களையும் பொருத்தியும், வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஆய்வு செய்து கணக்கெடுக்கின்றனர். வனவிலங்குகளை கணக்கிடுவதற்காக செல்போன் செயலியும் பயன்படுத்தப்படுகிறது.

களக்காடு மலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் நடக்கிறது. எனவே அதுவரையிலும் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது.