சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவி அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


சங்கரன்கோவிலில்   பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவி  அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 22 Feb 2021 12:53 AM IST (Updated: 22 Feb 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

சங்கரன்கோவில்: 
சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

சங்கரன்கோவிலில்  நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூகநலத்துறை மூலம் 527 ஏழைப்பெண்களுக்கு ரூ.2.22 கோடியில் திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டது. 

தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 162 பெண்களுக்கு ரூ.40½ லட்சம் மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனமும், வருவாய்துறை மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 451 பயனாளிகளுக்கு ரூ.46¼ லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் 1000 வீதம் 32 பயனாளிகளுக்கு ரூ.32,000 உதவித்தொகையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களும்,  4 பயனாளிகளுக்கு ரூ.36,000 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

மொத்தம் 7,038 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சத்து 62 ஆயிரத்து 804 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

உதவி கலெக்டர் அலுவலகம்

முன்னதாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ.2¾ கோடியில் அமைய உள்ள உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர் ராஜலட்சுமி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மகளிர் திட்ட இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, தனித்துணை ஆட்சியர் ஷீலா (சமூக பாதுகாப்பு திட்டம்), சமூகநலத்துறை அலுவலர் சரஸ்வதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாந்திகுளோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி, கூட்டுறவு அச்சக சங்க தலைவர் கண்ணன், பேரங்காடி துணைத்தலைவர் வேல்சாமி, சங்கரன்கோவில் தாசில்தார் திருமலைச்செல்வி, ஊரக வாழ்வாதார திட்ட தலைமை செயல் அதிகாரி பாலமுருகன், நகராட்சி பொறியாளர் முகைதீன் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story