மாவட்ட செய்திகள்

3 ேபர் கைது + "||" + Arrested

3 ேபர் கைது

3 ேபர் கைது
3 ேபர் கைது
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 
உண்டியல் உடைப்பு 
அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளனர். 
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தவுடன் திருட வந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மர்மநபர்கள் 
இதுகுறித்து தகவலறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். 
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே ராம நாயக்கன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சேதுராஜபுரம் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.
3 பேர் கைது 
அதன்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த செல்வம் (வயது 35), அலெக்ஸ்பாண்டியன் (29), முத்துக்குமார் (25) ஆகிய 3 பேைரயும்  கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தாய்-மகன் கைது
தாய்-மகன் கைது
2. அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது
3. மதுவிற்ற 2 பேர் கைது
மதுவிற்ற 2 பேர் கைது
4. மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
மராட்டியத்தில் ரூ.12.5 கோடி மதிப்பிலான மெபிடிரோன் என்ற போதை பொருளை கடத்திய நபரை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
5. டெல்லியில் கடந்த ஆண்டு 32 பயங்கரவாதிகள் கைது; போலீசார் அதிரடி நடவடிக்கை
டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பாதித்த காலத்திலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.