ரூ.33 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி
மேம்பாலம் கட்டும் பணி
திருமங்கலம்
திருமங்கலம் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கடந்து கற்பகநகர், காமராஜபுரம், விடத்தகுளம், விருஷங்குளம் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை உள்ளது. ரயில்வே கேட் தினமும் 70-க்கும் மேற்பட்ட முறை பூட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சிரமப்பட்டு வந்தனர். ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் அங்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று கலெக்டர் அன்பழகன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ரயில்வே பாலம் கட்டும் பணிக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ரூ.33 கோடி செலவில் பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளன. திருமங்கலம் தொகுதியில் 326 ஊராட்சிகளுக்கும் இணைப்புச் சாலைகள் பெரும்பாலான அளவில் முடிக்கப்பட்டுள்ளன. மக்களுக்காக செயல்படும் அரசு அ.தி.மு.க. அரசு. தற்போது எதிர்க்கட்சி தலைவர் மனு வாங்குவதற்கு பெட்டி எடுத்து ஊர் ஊராக சென்று வருகிறார். பெட்டியில் மனு போடும் அளவிற்கு குறைகள் இங்கு இல்லை என்றார்.
Related Tags :
Next Story