வேன் கவிழ்ந்து வாலிபர் பலி


வேன் கவிழ்ந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 Feb 2021 1:28 AM IST (Updated: 22 Feb 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

கொட்டாம்பட்டி
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 35). பர்னிச்சர் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் திருவண்ணாமலைக்கு பர்னிச்சர் பொருட்களை மினி வேனில் சென்று இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். வேனை டிரைவர் ராஜபாண்டி ஓட்டினார். 
கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கு அருகே வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story