சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Feb 2021 8:04 PM GMT (Updated: 21 Feb 2021 8:04 PM GMT)

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தோகைமலை
கரூர் மாவட்டம், தோகைமலை பஸ் நிலையம் அருகே தோைகமலை தமிழ்ச் சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தோகைமலை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், குளித்தலை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலும், தமிழ்ச்சங்க இயக்குனர் சந்தீப்குமார், வருவாய் அலுவலர் சதீஷ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் காந்திராஜன் கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர், மாணவ-மாணவிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். உங்களது உறவினர்கள் இரு சக்கர வாகனங்களில் வெளியிடங்களுக்கு செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறினார். ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தோகைமலை பஸ் நிலையம் முதல் போலீஸ் நிலையம் வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் சாலை விதிகளை மதிப்போம் என்று உறுதிெமாழி எடுத்துக் கொண்டனர். ஊர்வலத்தில் தமிழ் சங்க ஆலோசகர் சின்னவழியான், தமிழ்ச்சங்க தலைவர் மாணிக்கம், செயலாளர் குணசேகரன், பொருளாளர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்பட தமிழ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story