மாவட்ட செய்திகள்

உலக தாய்மொழி தினவிழா + "||" + World Mother Language Day

உலக தாய்மொழி தினவிழா

உலக தாய்மொழி தினவிழா
உலக தாய்மொழி தினவிழா
திருச்சி, 
உலக தாய்மொழி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எழுதமிழ் இயக்கம் சார்பில் உலக தாய்மொழி தினவிழா திருச்சி தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நேற்று காலை நடைபெற்றது. எழுதமிழ் இயக்க தலைவர் குமரசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் முன்னிலை வகித்தார். 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழறிஞர்கள் கலந்து கொண்டு, தமிழ்ச்சங்க கட்டிட வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் மற்றும் தமிழ்த்தாய் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் திருவள்ளுவர் போற்றி பாடல்களை பாடியும், தாய்மொழியை காப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். திருக்குறளை இந்திய தேசிய நூலாக அறிவித்து திருக்குறளை பரப்ப வேண்டும். மாநிலப்பள்ளிகள், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்க வேண்டும். இந்திய அரசிடம் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றி பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.