பூக்களால் தமிழ் எழுத்துக்கள் எழுதி அசத்திய மாணவ-மாணவிகள்

பூக்களால் தமிழ் எழுத்துக்கள் எழுதி அசத்திய மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 22 Feb 2021 2:02 AM IST (Updated: 22 Feb 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

பூக்களால் தமிழ் எழுத்துக்கள் எழுதி அசத்திய மாணவ-மாணவிகள்

வையம்பட்டி, 
ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள் வண்ண பூக்களால் பிரமாண்ட இந்திய வரை படத்தை வரைந்து, அதில் பிராமி, வட்டெழுத்து மற்றும் இன்றைய தமிழ் எழுத்துக்களில் “தமிழ்” என்ற வார்த்தை எழுதி அலங்கரித்து சர்வதேச தாய்மொழி தினத்தை கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

Next Story