பழக்கடையில் பணம் திருடிய சிறுவன் கைது


பழக்கடையில் பணம் திருடிய சிறுவன் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 2:02 AM IST (Updated: 22 Feb 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

பழக்கடையில் பணம் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


திருச்சி, பிப்.22-
திருச்சி சிந்தாமணி பாலாஜிநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). இவர் காந்திமார்க்கெட் மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பகல் இவருடைய கடைக்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன், பணப்பெட்டியில் இருந்து ரூ.200-ஐ எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றான். இதை கண்ட சுரேஷ் அந்த சிறுவனை பிடித்து காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

Next Story