பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்


பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Feb 2021 2:03 AM IST (Updated: 22 Feb 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்

வெள்ளகோவில்,
வெள்ளகோவில் பொக்லைன் எந்திரங்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஏ.என்.சேகர். செயலாளர் செந்தூர் முருகன் சேகர், பொருளாளர் கிளாசிக் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து தொடர் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். அதை யொட்டி வெள்ளகோவில் வட்டாரத்திலுள்ள ஓலப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, வெள்ளகோவில் ஆகிய ஊர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொக்லைன் எந்திரங்கள் அனைத்தையும் நேற்று வீரகுமாரசாமி கோவில் வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். 

Next Story