ருத்ராவதியில் ரேக்ளா பந்தயம்


ருத்ராவதியில் ரேக்ளா பந்தயம்
x
தினத்தந்தி 22 Feb 2021 2:07 AM IST (Updated: 22 Feb 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

ருத்ராவதியில் ரேக்ளா பந்தயம்

குண்டடம்,
குண்டடம் ரேக்ளா குழுமம் சார்பில் நேற்று குண்டடத்தை அடுத்துள்ள ருத்ராவதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 200 மீட்டர், 300  மீட்டர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 2 பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ரேக்ளா வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 1 பவுன் தங்க காசும், 2-வது பரிசாக ¾ பவுன் தங்க காசும், 3-வது பரிசாக ½ பவுன் தங்க காசும், 4-வது பரிசாக கால் பவுன் தங்க காசும் வழங்கப்பட்டது. தவிர ஆறுதல் பரிசுகளாக கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ருத்ரகுமார், அ.தி.மு.க மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் வழங்கினர். இந்த போட்டியில் குண்டடம், தாராபுரம், காங்கேயம், சென்னிமலை, பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கரூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 300 வண்டிகள் பங்கேற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை குண்டடம் ரேக்ளா குழும நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story