அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று: 36 ஆயிரம் வாைழகள் அடியோடு சாய்ந்து நாசம்


அம்மாபேட்டை பகுதியில் சூறாவளிக்காற்று: 36 ஆயிரம் வாைழகள்  அடியோடு சாய்ந்து நாசம்
x
தினத்தந்தி 22 Feb 2021 4:07 AM IST (Updated: 22 Feb 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் 36 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் 36 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. 
சூறவாளிக்காற்று
அம்மாபேட்டை, சென்னம்பட்டி, சனிச்சந்தை கொமாராயனூர், ஜரத்தல், கிட்டம்பட்டி, மசகவுண்டனூர், வடிவேலனூர், புது தண்டா, தேவலன் தண்டா, மற்றும் சிங்கம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிரிட்டு உள்ளனர். தற்போது வாழை அறுவடைக்கு தயாராக உள்ளது.  இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் வெயில் அடித்தது. மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீச தொடங்கியது. இதைத்தொடர்ந்து 6.30 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. 
36 ஆயிரம் வாழைகள்
அம்மாபேட்டை பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘வங்கிகளில் கடன் வாங்கியும், கையில் உள்ள பணம் அனைத்தையும் செலவழித்து வாழை பயிரிட்டோம். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த  நிலையில் சூறாவளிக்காற்றால் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆகிவிட்டது. எங்களுடைய ஒரு ஆண்டு உழைப்பு வீணாகிவிட்டதுடன், எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிட்டது. வாழைகள் சாய்ந்து நாசமாகி விட்டதால், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

Next Story