மாவட்ட செய்திகள்

சேலம் மண்டலத்தில் வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம் + "||" + forest officers transfer

சேலம் மண்டலத்தில் வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

சேலம் மண்டலத்தில் வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சேலம் மண்டலத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் குமார்.
 இவர், திருவண்ணாமலை மாவட்ட வன விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், சென்னையில் அயற்பணியாக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வந்த உதவி வனப்பாதுகாவலர் கண்ணன், சேலம் மாவட்டம் சித்தர்கோவில் வன விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் சித்தர்கோவில் மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.